

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு பண்டாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வல்வெட்டி ஒழுங்கைத்தோட்டம், அல்வாய் உண்டுவத்தை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி..
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!