Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 12 JUN 1943
உதிர்வு 21 SEP 2024
அமரர் யோகராணி ஆனந்தமூர்த்தி
வயது 81
அமரர் யோகராணி ஆனந்தமூர்த்தி 1943 - 2024 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga, Windsor ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராணி ஆனந்தமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்
முழுநிலவு போன்ற முகம்
முன்வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்களை நினைக்காத நொடிகளில்லை
இங்கு வாரத்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கின்றோம் அம்மா
கனவில் நீங்கள் வரும் பொழுது
தேடுகின்றோம் நீங்கள் வருவீர்கள் என்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றோம் தனிமையில் இன்று
கடைசிவரை இருப்பீர்கள் என்று
மறந்துவிட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டீர் எங்களை விட்டு
எங்கள் கனவை கலைத்து விட்டான்
காலன் உங்களைக் கவர்ந்து

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிராத்திக்கின்றோம்....

தகவல்: குடும்பத்தினர்

Photos