1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகநாதன் ஞானேஸ்வரி
(மலர் அக்கா)
வயது 60

அமரர் யோகநாதன் ஞானேஸ்வரி
1963 -
2024
வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு மூன்றாம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகநாதன் ஞானேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!
பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்க உள்ளம் துடிக்குதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்