Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 JAN 1948
இறப்பு 05 SEP 2024
அமரர் யோகம்மா இராசரெத்தினம்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி, புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாலயம்
வயது 76
அமரர் யோகம்மா இராசரெத்தினம் 1948 - 2024 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா இராசரெத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!

உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை

உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 04-10-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் செல்வா மஹால் மண்டபத்தில் (இல 1229,பூநாறி மடத்தடி, கொக்குவில்.) நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்