

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகம்மா இராசரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-08-2025
அம்மா
நீ இல்லாத ஒரு வருஷம்
கணம் தோறும் வாழ்வு எமக்கு
வெட்ட வெளி
வெயில் கொடுமை
நீரிலா மேகம்
மயான அமைதி.
திகதி கிழிக்காத கலண்டர்
தீபம் எரியாத சாமி அறை
விரதங்கள் மறந்த மாதங்கள்
புத்துணர்வு இல்லாத காலங்கள்
சுவை குறைந்த உணவு
சுவாரசியம் இல்லா வாழ்வு
நோவின் வலி தாங்கி
மீண்டு வருவாய் எனும்
எதிர்பார்ப்பில்
காலன் கத்தி வைத்து
கீறி கிழித்து
ஆண்டு ஒன்றாயிற்று..!
பாயில் படுத்து வருந்தவில்லை
ஆனாலும்
எங்கள் வாழ்வு படுத்தது
விடியல் வரவில்லை கிழக்கில்
உள்ளக் கிடக்கைகளை
சொல்லி அழும் வடிகால் -அம்மா
நீ எங்கள்
கோபத்தின் குறைநிரப்பி
நம் ஆத்திரங்களின் கண்ணாடி
அன்பின் அமுதசுரபி .
நேற்று இன்று நாளை என்று
சுவை கெடாமல் கதைத்த
ஸ்ருதி நாத தந்தி .
எம் வெளிச்சம் இருண்டு
இன்று ஓராண்டு ..,
நீ……
எங்கும் போகவில்லை
எம்மோடு நினைவில் நிறைந்து
அரூபமாய் வாழ்கிறாய்
உன்
ஆத்மா இளைப்பாறட்டும்
இறை நிழலில் ..!
பிரிவால் துயர் நிறைந்த
கணவர்,பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள் மற்றும் உறவினர்கள்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by Lathan family from Toronto, Canada
Saddened to hear your passed away! Regretting , please accept our deepest sympathies. May her soul rest in peace !