9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத்தாயே மம்மி
எம்மை பெற்று வளர்த்து
அன்புக்கும் பாசத்திற்கும் உறைவிடமாய்
பல இன்னல்களை கடந்து
எம்மை
வளர்த்து வாழவைத்த எங்கள் மம்மியே
உதிரத்துள் உயிர்த்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
இன்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆள்வாய்
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலே நீ வாழ்வாய்
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 21-08-2021 சனிக்கிழமை அன்று அன்னாரின் லண்டன் இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்