Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 OCT 1947
இறப்பு 30 AUG 2012
அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி)
வயது 64
அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் 1947 - 2012 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

மம்மி உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்கின்றீர்கள்

பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா!

மம்மி உன் அன்பின் ஆழம்
தான்இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
மம்மி என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்

எம் அன்பு மம்மிக்கு ஆசை முத்தங்கள் பல கோடி
கனவிலும் நினைவிலும் நீங்களே அன்பு தெய்வம்

மம்மி உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

என்றும் உங்களுடைய நீங்காத நினைவுகளுடன் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices