Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 OCT 1947
இறப்பு 30 AUG 2012
அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி)
வயது 64
அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் 1947 - 2012 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

மம்மியின் நினைவுகள் மனதை விட்டு அகலாது...

பாலூட்டி சீராட்டி பக்குவமாய் அமுதூட்டி
பாசக்கரத்தாலே ஆரத்தழுவி நின்று
பார் போற்ற ஆளாக்கிய அன்னையே
நீர்வைத் திருமண்ணில் வேர் கொண்ட அம்மையே
நீண்ட பெருவானின் முழுமதியே
நீயில்லா இருப்பிடம் வெறிச்சோடிக் கிடக்குதம்மா
அன்னையாய் அம்மையாய் யோகம் கொண்ட மலராய்
அனைவர் உள்ளத்திலும் அன்பான மம்மியாய்
அணையாது ஒளிதந்த பெண்ணெங்கே
உயிரணைந்து உறங்கிவிட்ட உத்தமியே
உனையிழந்து சப்தகாலங்கள் கடந்தாலும்
உயிர்தந்த உன்னை என்றுமே நாம் மறவோம்.. 


அன்னாரின் 7ம் ஆண்டு ஆத்ம சாந்திக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices