
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி யாதவராயர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
உங்கள் நினைவுகள் இப்போதும் எம்முள் ஒளிமயமாக இருக்கின்றது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்த அம்மாவே
அருங்குணங்கள் கொண்டவரே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்,
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
எமது உயிர் உள்ளவரை -எம்
நெஞ்சோடு இருக்கும்
உங்கள் நினைவுகளுடன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும், வீட்டுக்கிரியையும், மதிய போசன நிகழ்வும் 06-08-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 1:00 மணிவரை ஆஸ்பத்திரி வீதி, குடியிருப்பு வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences to my dear friend Jayaseelan and his families By Balachandran Nadarajalingham Family