
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட யாதவராயர் மனோன்மணி அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாகநாதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற யாதவராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை கனகம்மா, சண்முகம், பசுபதி குழந்தைவேல், சோமசுந்தரம் குணமணி மற்றும் மகேந்திரராஜா ஈஸ்வரி, சிவலிங்கம் வசந்தராணி, மயில்வாகனம் பரமேஸ்வரி, மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து, அம்பலவாணர் மங்களம், நாகநாதபிள்ளை மருதைனார் மற்றும் ராமநாதன் பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணசீலன், பத்மசீலன், திருஞானசுந்தரம், ஜெயசீலன், சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உருத்திரகுமாரி, சாகரிக்கா, சிவபாலினி, யுதிஸ்ரிகா, சொரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
வீஸ்மன், அவந்தி, விசாகன், வைஸ்ணவி, ரிஷி, திவ்யா, ரமணன், ஹரணி, ஹஸ்வினி, சுருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இஷானி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2024 திங்கட்கிழமை அன்று காலை இலக்கம் 10, ஆஸ்பத்திரி வீதி குடியிருப்பு, வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences to my dear friend Jayaseelan and his families By Balachandran Nadarajalingham Family