யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல.24, கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யாதவராயர் கற்பகம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பக் குல விளக்கே அம்மா- நீ
பொறுமையில் பூ மகள் புன்னகைக்கு அரசி - நீ
துன்பம் வந்தாலும் துவழாத அன்னை - நீ
எங்கள் குடும்பத்தின் கற்பக தரு அம்மா- நீ
என்னமுதத் தாயே இனித்திடக் கதைப்பாயே
தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் தெய்வத் தாயை
பொக்கிசம் நீங்களம்மா போன இடம் எங்கே
பொறுக்க முடியவில்லை பொசுங்கி நிற்கின்றோம்
நாடு விட்டு நாடு வந்து நம் தாயை இழந்தோமே
வீடு சென்று பார்ப்பதற்கு விதியும் விடவில்லையே
விடுமுறை கழிக்க கடலுக்கு சென்று
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மரணத்தை தழுவினாயே
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் கூடி நின்று
எல்லோரும் சேர்ந்து வழியனுப்பி மாதம் ஒன்று ஆகிவிட்டதம்மா
கூடி நின்று கதறுகிறோம் அரவணைக்க நீங்களில்லை
பாவிகள் நாங்களம்மா பரிதவித்து நிற்கின்றோம்
காலன் தன் கணக்கை முடிக்க
அம்மா நீங்களும் மறுக்காமல் வாழ்ந்தது போதுமென்று
உங்கள் புன்னகை முகம் மாறாமல்
எல்லோருக்கும் கையசைத்து விடைபெற்று
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
இறுமாப்புடன் விண்ணுலகம் சென்றீரே- அம்மா
உங்கள் காலடி தேடி ஓடுகின்றோம்
எங்கே ? அம்மா நீங்கள் எங்கே ?
-உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று மு.ப அவரது இல்லத்திலும் ந.ப 12:00 மணியளவில் 75 Av. Jean Jaurès, 93120 La Courneuve, France எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:-
Institut SKAF
75 Avenue Jean Jaures
93120 La Courneuve
Metro: 7: La Courneuve
Tram: 1: Danton