யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 24 கட்சன் வீதியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யாதவராயர் கற்பகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-08-2024
அன்பின் திருவுருவே ! ஆருயிர்த் தெய்வமே !
அகிலத்தை விட்டு ஆண்டவன் அடி சேர்ந்து - ஓராண்டு
துன்பத்தின் விளிம்பில் நின்று துடிக்கின்றோம்
எங்கள் அம்மா-எங்கேயென்று தேடுகின்றோம்
அன்பாய் அரவணைத்த அன்னைமடி எங்கே?
ஆறுதல் சொல்லும் வார்த்தை எங்கே?
என்றென்றும் புன்னகை பூத்த பூ முகம் எங்கே?
இனிக்க இனிக்க கதை பேசும் அழகு எங்கே?
ஆலமரம் போல் உறவுகளைத் தாங்கி தழுவிய கைகள் எங்கே?
ஆண்டு ஒன்று ஆனதம்மா-தேடுகின்றோம் எங்கேயென்று
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாதம்மா உங்கள் பிரிவுத்துயர் - ஆறாது
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாட்கள்
எங்களை விட்டு நீண்ட தூரம் நீங்கள் சென்றாலும்
ஆறாதம்மா உங்கள் பிரிவுத்துயர் - ஆறாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...