Clicky

பிறப்பு 24 OCT 1971
இறப்பு 15 APR 2020
அமரர் யசோதரன் சாம்பசிவம் (அசோகன்)
வயது 48
அமரர் யசோதரன் சாம்பசிவம் 1971 - 2020 கொடிகாமம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பரன் 16 APR 2020 Switzerland

மீசாலைவடக்கைச் சேர்ந்த அருமை அண்ணன் அசோகன் அவர்களின் பிரிவு , ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது . அன்னார் லண்டனுக்கு குடிபெயர்ந்த போதும் தான் கற்ற , வீரசிங்கம் மத்தியகல்லூரியின் வளர்சியிலும் , குலதெய்வமான இராமாவில் கந்தசாமி ஆலயத்தின் மீது பற்றுதிகொண்டு , பல்வேறு திருப்பணிகளிலும் , அபிவிருத்திப்பணிகளிலும் ஈடுபட்ட நன்மனிதர் . ஊரவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட , இவரது குடும்பமும் இவரும் அந்த ஊர் வளர்சியிலும் அக்கறை கொண்டவராகவே இருந்துவந்துள்ளார். அத்தோடு வீரசிங்கம் மத்தியகல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் லண்டன் கிளையில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துவந்தவர். அதன் மூலம் லண்டனில் உள்ள பழையமாணவர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு நற்கருமங்களை ஆற்றிய அசோகன் அண்ணனை காலன் , இவ்வளவு விரைவாக கொண்டு சென்றமை , அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது . அன்னாரின் ஆத்மா சொக்கத்தில் நலம் பெற இராமாவில் முருகனைப் பிரார்த்தித்து, அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி !!! இவ்வண்ணம் பரன் சுவிஸ்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 14 May, 2020