என்னை செல்லமாக கண்ணன் என்று வீட்டில் அழைப்பார்கள். அந்த ஆயர்பாடி கண்ணனுக்கு எப்படி யசோதா வளர்ப்பு தாயோ அதே மாதிரி எனக்கும் இந்த யசோதா வளர்ப்பு தாய். நான் A/L படிக்கும் போது யசோ பெரியம்மா வீட்டில் இருந்து தான் படித்தேன். யசோ பெரியம்மாவை தெரிந்தவைக்கு நான் சொல்ல தேவை இல்லை அவரது குணாதிசயங்கள். அவ இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பாக இருக்கும், எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து எப்பவும் சந்தோசமாக இருப்பா, அவாவோட இருந்தாலே கவலை எல்லாம் மறந்து எல்லோரும் குழந்தைகள் ஆகி விடுவார்கள். தமிழரின் விருந்தோம்பலுக்கு ஓரு மகுடம் யசோ பெரியம்மா. வீட்டிக்கு வரும் யாரும் சாப்பிடாமல் திரும்புவது கடினம். சிறு வயதில் நல்லூர் திருவிழா எண்டாலே எங்களுக்கு கொண்டாட்டம் ஏனென்றால் எல்லா ஒன்று விட்ட சகோதரர்களும் (cousins) பட்டாளமாக பெரியம்மா வீட்டுக்கு படை எடுப்போம். சப்பர திருவிழாக்கு முதல் நாள் போய் பூங்காவனம் வரை நின்று பிறகு எங்கள் அப்பா அம்மாவிடம் extension கேட்டு அழுவம். எங்கள் எல்லாரையும் விடியக்காலமை எழுப்பி குளிக்க வார்த்து கோயிலுக்கு அனுப்பி விட்டு, தான் வீட்டில் இருந்து எங்களுக்கு சமைத்து சாப்பாடு பலகாரம் எல்லாம் செய்து வைத்திருப்பா. அவ கோயிலுக்கு பக்கத்தில் இருந்தாலும் திருவிழா நேரம் கோயிலுக்கு போறதே கிடையாது. திருவிழாவுக்கு வரும் எல்லா உறவுகளையும் உபசரிப்பதிலேயே அவாவுடைய முழு கவனமும் இருக்கும். பெரியம்மாவின் வளர்ப்பில் நான் கற்ற பல விடயங்கள் என்னுள் ஆணிவேர் போல் ஆழமாக பதிந்திருக்கிறது. அவ அடிக்கடி சொல்லும் ஆங்கில பழமொழி எனது வாழ்க்கையின் மூல மந்திரமாக இருப்பதுடன் எனது PhD Thesis, முதல் எனது பல்கலைக்கழக அலுவலக கரும்பலகை வரை இன்னும் பலருக்கு கடின உழைப்பின் மஹிமையை எடுத்து சொல்லி கொண்டிக்கொண்டு இருக்கிறது. “Heights of great men reached and kept were not attained by sudden flight But they while their companions slept were toiling upwards in the night”. We will miss you Perriyama
I am very saddened to hear of Yaso mami’s passing. She was a woman with undisputed style only second to her kind and loving manner. The first time I met her was on her wedding day. After that, I...