Clicky

பிறப்பு 07 MAY 1933
இறப்பு 22 SEP 2021
அமரர் யசோதராதேவி தியாகராஜா
இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி
வயது 88
அமரர் யசோதராதேவி தியாகராஜா 1933 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்பு மருமக்கள் - ரோகிணி, கல்யாணி, தர்மினி 01 OCT 2021 Sri Lanka

அன்பான மாமியே, “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற வள்ளுவர் குறளுக்கமைய வாழ்ந்து இறைவனடி சேர்ந்த உங்களுக்கு இவ்வரிகளைக் காணிக்கையாக்குகின்றோம். எமக்கு ஆண்டவன் கொடுத்த அன்புத் தாய் மாமி நீங்கள். உங்களுடன் இருக்கும் பொழுது எப்போதும் சந்தோஷமே நிறைந்து இருக்கும். அந்த அழகிய தருணங்கள் என்றுமே மறக்க முடியாதன. மிக அழகாக சேலை உடுத்து கம்பீரமாக காட்சி அளிப்பீர்கள். மங்கல நிகழ்வுகளில் சிரித்த முகத்துடன் முன்னிற்பீர்கள். அமங்கல நிகழ்வுகளிலும் முன்னின்று உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். எமது அம்மாவுக்கும் உங்களுக்குமான உறவு தனித்துவமானது. எமது தந்தையின் இறப்பின் பின்னர் நீங்கள் எமக்குச் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை. உங்கள் கடைசிக் காலத்தில் எம்மை விட்டுத் தொலை தூரத்தில் இருந்ததால் எந்த உதவியையும் நாங்கள் உங்களுக்கு செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சி எமக்கு இருக்கின்றது. அழகிய புன்சிரிப்பு, யாவரையும் வரவேற்று உபசரிக்கும் பண்பு, உற்றார், உறவினருக்கு உதவிடும் உயரிய குணம், எதற்கும் அஞ்சா நெஞ்சம், இத்தனை அன்பான நீங்கள், உங்கள் இறுதிக்காலத்தில் மௌனமாக இருந்தது எமக்கு வேதனையே. ஆனாலும் நீங்கள், உங்கள் கடைசி மூச்சு வரை அமைதியாகவும் சாந்தமாகவுமே வாழ்ந்தீர்கள். நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும் எப்போதும் எமது நெஞ்சத்தில் நிறைந்து இருப்பீர்கள்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Sep, 2021