🌺அன்பு யசோ மாமிக்கு ஆத்ம வணக்கங்கள்..
வாழ்க்கைப் பயணத்தில் எம் நெஞ்சில் சிலரின் காலடித்தடங்கள் மட்டும் அழியாமல் பதிந்திருக்கும். யசோ மாமி பதித்த தடங்கள் அத்தகையவை.
மிருதுவான உள்ளமும், நன்னெறிகளும் கொண்ட தியாகு மாமாவுடன் யசோ மாமியின் தாம்பத்யம் இனியதொரு சகாப்தம். யசோ மாமி தனது தாராள அன்பினால், கலகலப்பான பேச்சால், நடத்தையால் உறவினர்கள் யாவருக்கும் இனிமையானவரானார்.
முகத்திற் சிரிப்பு மாறாமல் அன்புடன், பண்புடன் வீட்டிற்கு வருவோர் எவரையும் போதும் போதும் என்று அவர்கள் திணறும் வரை உபசரிப்பது அவரது மாண்பு. கள்ளமில்லா உள்ளமும், கலகலப்பான பேச்சும் அவருக்கே உரித்தான பண்புகள். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் ஒரு நல்ல மனைவியாக, தாயாகத் தன் கடமை
வழுவாதிருந்தவர். தியாகு மாமாவை அவர் பேணிப் பாதுகாத்த விதம்; இராகுலனை அவர் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய விதம் ஆகியன இதற்குச் சான்று. இத்துடன் கூடவே அவர் பணிபுரிந்த கல்லூரியிலும் தன் பங்குக்கான கடமைகளைத் தேவைக்கு அதிகம் நிறைவேற்றியவர் யசோ மாமி. ஆனால் இந்த நல்ல ஜீவனுக்காக காலமும் காலனும் தம் செயற்பாட்டை நிறுத்தவில்லை, தியாகு மாமா எம்மைவிட்டுப் பிரிந்தார். தியாகு மாமாவின் இழப்பு யசோ மாமியின் வாழ்க்கையிலொரு பேரிடி. தியாகு மாமா மறைந்த பின் பழைய யசோ மாமியை தேடினேன், காணமுயவில்லை. இதுதான் காலத்தின் கோலம், விதியின் விளையாட்டு போலும்.
நான் சிறுவனாக இருந்த நாள்தொட்டு அன்பு காட்டி அரவணைத்து; நான் மணமுடித்த பின் என்னுடய மனைவி இரமணியையும் அதே பாசக்குழைவுடன் அரவணைத்த அந்த அன்புள்ளம் இன்று மீளாத்துயில் கொண்டது. என்றும் எமதுள்ளங்களில் வாழும் யசோ மாமிக்கு எமது ஆத்ம வணக்கங்கள்!!
ஓம் ஷாந்தி!!!
யுவி, இரமணி.
I am very saddened to hear of Yaso mami’s passing. She was a woman with undisputed style only second to her kind and loving manner. The first time I met her was on her wedding day. After that, I...