7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சேவியர் சிவகாமசுந்தரி
வயது 75
அமரர் சேவியர் சிவகாமசுந்தரி
1944 -
2019
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், மன்னார் மடுறோட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேவியர் சிவகாமசுந்தரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள் நிறைந்திருக்கும்
எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ நிற்கின்றோம்!
நிலவை சூரியனை ஒளிர்கின்ற தாரகைகளை
பார்க்கையிலே அங்கே அம்மா
உங்கள் முகம்தானே பட்டொளியாய் தெரிகிறது!
ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்!
எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே...
தகவல்:
குடும்பத்தினர்
செல்லலாமா மணியின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கெள்கிறென்.