Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை
(ஸ்ரான்லி- இளைப்பாறிய நீதிமன்ற அலுவலகர் முதலியார்)
கர்த்தருக்குள் - 02 SEP 2018
அமரர் வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை 2018 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஆறு போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை!

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஆறு வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்