

பிரித்தானியா லண்டன் Plumstead ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த விரூஷன் அலெக்ஸ் ஜனர்த்தனன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-03-2025
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து எடுத்து விட்டு
எங்களை பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
ஓராண்டு ஆயினும் ஆறாத எங்கள் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்...!
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்..!
எங்கள் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினோம் இன்றோ
நீர் இல்லாமல் எங்கள் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் !
We miss you Thambi! Enkooda urimaiya palahina ennudiya Thambi da nee😢 Love Luxi Anni and Kajan Anna