அன்புடன் ஆசிரிய, அதிபர் பணிகள் நல்கி அன்புடன் அணைத்த பிள்ளைகள் வளர இன்புடன் இருந்த கவிமலர் நீயே இன்புற்ற கல்வி தந்தனை நன்றே! பாவாரம் கொண்டு பழந்தமிழ் தேவாரமாக தேவரீர் தேனமுதை தினந்தினம் ஏற்றி நின்ற தேன்குரலின் திரவியமே கவிநாயகரே ஐயா தேவருள் கலந்திடுவோ எமைப் பிரிந்தீர்? குலையாத குன்றமென குரலாலே குவலயம் தலையாலே போற்றிநிற்க கவிநாயகர் என சிலைபோல முத்தமிழ் எழுத்தாலே வளர்ந்;து நிலையில்லா வாழ்வென்று உணர்தோ பிரிந்தீர்? கலையாத கல்;வியென கற்றனைத்தும் ஊறிவர அலையாத அகத்தெழுந்த அழகு தமிழ்நீந்திவர உலையாக உன்வாயின் கவிவளம் உதிர்ந்துவர குலையாத முத்தமிழ் தந்தவரே பிரிந்ததேனோ? செந்தமிழே உயிர்மூச்சு உன்தமிழோ நாவீச்சு பைந்தமிழால் பரவசமே ஊட்டிவந்த கவிவீச்சு நைந்துருகி அகமகிழ தமிழ்த்திறனில் தனிவீச்சு ஐந்தெழுத்து மந்திரமே சிவராத்;திரி அழைத்ததோ? சலசலக்கும் சவாரிமாட்டுச் சதங்கை ஒலிபோலக் கலகலக்கும் கம்பீரக்குரலாலே இடிக்கு; தவில்போல பலபலவாய்த் தமிழாலே அவைமகிழ சிரிப்பொலியில் வலம்வந்து தமிழ்முழக்கம் செய்தவரே சென்றதுமேன்? தமிழ் மொழியின் தனிப்பெருமை எழுத்திலாக்கி தமிழ் எழிலுறவே எண்பது நூல்களாக்கி நிலையான அழியாத கோலமென தமிழன்னை எளலேற்றி அழிவில்லாத் தமிழாய்த் தந்தகவித்துவமே எங்குற்றீர்? பாசமுறப் பழகிவந்த பக்குவந்தான் பரிவுறவே ஆசையுற அருகிருந்து கதைகேட்டால் இன்பூறும் ஓசையுற உன்பொழிவைக் கேட்டின்புற வைத்தகோவே ஓதும் ஒலியினிலே உள்நின்று ஒளிந்திடுக என்றும் தவமணி அம்மையும் தவமாகக் கண்ட வாணியும் நவமணி யாய்வாரணனும் துணையோடு கலங்கிநிற்க விண்ணின் வரவேற்பு விரைந்துதான் வந்ததுவோ கண்ணீர் வடிக்கின்றார் அவர்போற்ற அமைதிகாண்க! வாழ்ந்தனை வளமுற வையகம்போற்ற வாழ்வின் கருமங்கள் ஆற்றியே நிறைவாய் தாழ்விலா பணிகள் தந்தனை இறையவன் தாழ்களில் அடங்கினை சாந்தி பெற்றிடு ஐயா ! த.சிவபாலு குடும்பத்தினர் கனடா
On behalf of Tamil Cultural Association of Waterloo Region and profound respect that I extend my deepest condolences to the family on the passing of Master Kandavanam. Late V. Kandavanam's...