Clicky

மண்ணில் 28 OCT 1933
விண்ணில் 11 MAR 2024
அமரர் விநாயகர் கந்தவனம் (கவிநாயகர் கந்தவனம்)
Retired teacher, Principal, Poet
வயது 90
அமரர் விநாயகர் கந்தவனம் 1933 - 2024 நுணாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விஜய் தியாகராஜா தலைவர் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடா 16 MAR 2024 Canada

கனடா தேசிய கீதத்தை அழகாகத் தமிழாக்கம் செய்து, மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடா, பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய மகாஜனாவின் முத்தமிழ் விழாவில், 25 ஆண்டுகளின் முன், முதலாவதாக மேடையேற்றிய மகாஜனாவின் மருமகனான கவிஞர், எமது அபிமானியாக எம்மோடு பயணித்தது குறிப்பிடத்தக்கது. உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமரும் வசீகரம் மிக்கவருமான கவிநாயகர், மேடைகளுக்கு கம்பீரத்தையூட்டி சபையோர்குக் கௌரவம் சேர்க்கும் சுவாரஸியமான பேச்சாளரும், அதீத ஆற்றல் பெற்ற இனிமையான எழுத்தாளரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தமிழால் தானும் வாழ்ந்து தன் வாழ்வால் தமிழையும் வாழ வைத்த கவிஞரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது கல்லூரி சமூகம் சார்பிலும், எமது சங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Tributes