யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வினாயகர் பாலரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உங்களை பிரிந்து நாட்கள்
முப்பத்தொன்று கழிந்து போயிற்று
நாட்கள் மாதங்களாய் கழிந்து ஓடினாலும்
முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்
நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்
எம் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்
ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரணக் கிரியைகளிலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் துயரச்செய்தி அறிந்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் எம்மோடு துயரில் பங்கு கொண்டோருக்கும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி, முகநூல் மூலம் அனுதாபங்களை தெரிவித்தோருக்கும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும் மற்றும் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், கண்ணீர் அஞ்சலி பாதாதைகள் மூலம் அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
appa I never forget you . lots of love you Appa