2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வினாயகர் பாலரத்தினம்
வயது 85

அமரர் வினாயகர் பாலரத்தினம்
1936 -
2021
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாயகர் பாலரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் இதய தெய்வமே!
ஈராண்டுகள் சென்றாலும் - உம்
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும் எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்
என் செய்வோம் நாங்கள்
இறைவனைக் கண்டதில்லை
எமக்கு மனித வடிவில்
வந்த தெய்வம் நீங்கள் ஐயா
பண்பின் சிகரமாய், பாசமுள்ள துணைவராய்,
தந்தையாய், மாமாவாய், தாத்தாவாய்,
உறவினராய், நண்பராய் எமக்கு வழிகாட்டினீரோ
என் செய்வோம் நாங்கள் எமது மனதில்
என்றும் நிறைந்திருப்பீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா என்றும் எங்களை
வழிநடத்தும்..
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
appa I never forget you . lots of love you Appa