Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 JAN 1936
இறப்பு 22 SEP 2021
அமரர் வினாயகர் பாலரத்தினம் 1936 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி: 25-09-2022

யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாயகர் பாலரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஆயிரம் கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!

பாசமழை பொழிந்து பரிவோடு
 பக்குவமாய் வளர்த்த எமது
அன்புத் தந்தையே!
 அழகிய உங்கள் சிரிப்பெங்கே
 இனிமையான அறிவுரையும், முத்து
போன்ற சிறந்த பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
வாருங்களே அப்பா! 

வாசம் குன்றா வாழ்வு தந்து
 எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப்போல் இந்த உலகில் யார்
 இருக்க முடியும் அப்பா!

 உங்களின் பாசத்திற்கு
அளவேயில்லை அப்பா!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை!

அப்பா அப்பா என்று கூப்பிட
ஏங்கிநிற்குது எங்கள் மனம்!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்