

யாழ். இணுவில் மேற்கு செகராசசேகர பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி கலாதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியான புன்சிரித்த முகமும்
அயராத உழைப்பும் - உறவுகளை
ஆதரிக்கும் உள்ளமும் வளமான வாழ்வுக்கு
அன்பால் கிடைத்த வரமே
அவனியை விட்டு நீங்கி-இன்றோடு
ஆண்டு ஒன்று ஆனதோ
ஆறவில்லை எம்துயர்
குறையேதுமின்றி காத்த - எமது
குடும்ப ஆலவிருட்சத்தின் - ஆயுள்
காலத்தை குறைத்தானோ
ஆண்டவன்
கண்ணீரில் எம்மை கரையவிட்டு
காலனவன் தன் கணக்கை முடிக்க
கடல் கடந்து சென்றீர்களோ
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
விண்ணுலகம் விரைந்துவிட்டீர்களோ
விடியும் பொழுதுகள் விழிநீரோடு
வாழுகின்றேன் எம் மழலைகளுக்காக
கண்முன்னே கரம் கோர்த்து நாம் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
நினைத்துருகாத நாளில்லை
நெஞ்சில் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை பிரார்த்திக்கும்
மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினர்.
கலான்நாவின் குடும்பத்துக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் My sincere condolences to you and your family.