குற்ற உணர்வால் விம்மி அழ விட்டுச்சென்றாயே விமலா , உன்னை வீதியில் வாழ விட்டு நாம் வீடுகளில் வாழ்ந்தோமே நலமா. உன் நண்பரென்றார் , உறவினரென்றார் , தமிழரென்ற அடிப்படையில்.. உறவுகள் என்று கூட அலட்டினார்கள் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பலமாய் ! ஆனால் சற்று வாழ்க்கையில் வழி தவறி வீதிக்கு வந்து விட்டதால் அனாதைப் பிணமாய் சாக விட்டார் நிஐமாய் !
நீ உயிருடன் இருக்கும்போது உனக்காக நாம் கேட்ட உதவிகள் ஓரளவு தான் கிடைத்தன ! ஆனால் நீ மரணித்த மறு கிழமையே ஓடோடி வந்தன எம் உறவுகள் சகல உதவிகளுடன் !!! இதுதான் நிதர்சனம் நண்பா, யதார்த்தம் நாறுகிறது நண்பா, மன்னித்து விடு என்னை , என் வாழ்க்கையின் கடைசி வரை உன்னைக் கைவிட்ட குற்ற உணர்வில் எங்கோ நான் பிராயச்சித்தம் தேடிக்கொண்டு தான்இருப்பேன் உன் நினைவில்......... இனியாவது உன் ஆத்மா குளிரிலும் மழையிலும் வாடி வதங்காமல் நிம்மதியாக உறங்கப் பிரார்த்தனை செய்யும் உன்னை கை விட்ட குற்ற உணர்வில் பெஞ்சமின்
Now you are in a better place my ! You don’t need to beg for anything or suffer from the nature’s !.a place you rest in peace .,is the best place God gives you.! Goodbye from an unknown friend of