Clicky

அன்னை மடியில் 19 AUG 1948
இறைவன் அடியில் 23 FEB 2026
திருமதி விமலாதேவி விஜயகுமார்
B.A(Hons)- Peradeniya University, Post Graduate Diploma in Education. Retired Teacher - Methodist College, Trincomalee, Srilanka. Jaffna Hindu Ladies College, Srilanka. St Margaret’s Public School- Toronto, Canada. Co-Founder and Director of V V Tutoring Centre and Ontario International Institute. Premier Award for Teaching Excellence, Ontario - 2009
வயது 77
திருமதி விமலாதேவி விஜயகுமார் 1948 - 2026 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
இரங்கல் உரை
Mrs Vimaladevi Vijeyacumar
வேலணை கிழக்கு, Sri Lanka

எனது முன்னாள் நண்பி விமலாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகின்றேன். எமது கல்லூரித்தாய் Velanai Central இல் (VCC தரம் 6 – தரம் 8 வரை 1951 – 1961) இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றத்தால் திடீரென விமலா Jaffna Hindu Ladies College க்குச் சென்று விட்டார். ஆம் அந்த நாள் ஞாபகம் என் நெஞ்சிலே வந்தது... காலங்கள் கடந்தாலும் (6 1/2 தசாப்தங்கள்) எங்களது பழைய நினைவுகள் என்றும் பசுமையானவை. எப்போதும் கலகலப்பாகச் சிரித்த முகத்துடன் பேசி மற்றவர்களை (குறிப்பாக எமது நட்பு வட்டம்) தனது சுவாரசியமான பேச்சினால் சிரிக்க வைத்த இதயம் இன்று மௌனமாகி விட்டது. எனது இதயத்தில் நீங்கா இடத்தை, அதுவும் மூன்றே மூன்று வருடத்தில் பிடித்த ஆருயிர் நண்பியின் சிரிப்பும் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய நகைச்சுவை கூடிய உரையாடல்களும் இன்னும் என் நினைவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. "துயரங்களை மறக்கச் செய்யும் உன் மந்திரப் பேச்சு... எங்களைச் சிரிக்க வைத்த உன் கள்ளமில்லாத சிரிப்பு... இன்று நினைவுகளாக மட்டுமே! மீண்டும் எங்கே காண்போமோ?" உன் ஆன்மா இறைவனடியில் அமைதியில் துயில பிரார்த்திக்கின்றேன். அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உடன்பிறப்புக்கள், சுற்றத்தவர் அனைவருடனும் துயர் பகிர்ந்து எனது ஆழ்ந்த இரங்கல்கள். - திலகம் தர்மலிங்கம் (திலகம் பாலகுமாரன்) ஓய்வு நிலை ஆசிரியர்

Write Tribute