Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 19 AUG 1948
இறைவன் அடியில் 23 FEB 2026
திருமதி விமலாதேவி விஜயகுமார்
B.A(Hons)- Peradeniya University, Post Graduate Diploma in Education. Retired Teacher - Methodist College, Trincomalee, Srilanka. Jaffna Hindu Ladies College, Srilanka. St Margaret’s Public School- Toronto, Canada. Co-Founder and Director of V V Tutoring Centre and Ontario International Institute. Premier Award for Teaching Excellence, Ontario - 2009
வயது 77
திருமதி விமலாதேவி விஜயகுமார் 1948 - 2026 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடம், திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி விஜயகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 பாசத்தின் பேருருவாய்
 பாரினில் வந்துதித்த எங்கள் குலவிளக்கு அம்மா!
நாட்கள்  பல உருண்டோடியதோ
 உங்களை நாமிழந்து!
ஆலமரமாய் அடித்தளம் இட்டு
விழுதுகள் எங்களை
 வெற்றிகரமாய் வளர்த்தீர்!

நாட்கள் பல சென்ற
 பின்பும் ஆறவில்லை எமது உள்ளம்!

இறப்பு என்பது நியதி தான்
என புத்தி சொல்கிறது ஆனால்
உள்ளம் ஏற்க மறுக்கிறதே!
 இறைவன் காலடியில்
என்றென்றும் வாழ்ந்திடம்மா
 உன் நேசம் மறவாது
 நிழலாக நாமிருப்போம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை Canada Kanthaswamy Temple Society, 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.