
மல்லாவியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜிதா நந்தகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
பிள்ளையாய், தாயாய், சகோதரியாய்,
மனைவியாய், நண்பியாய், உறவினராய்,
அன்பிற்கும், பாசத்திற்கும் உறைவிடமாய்
திகழ்ந்தாய் அம்மா!!!
இன்று எல்லோரையும் தவிர்க்கவிட்டு
உன் ஆன்மா இறைவனிடம் சர்ணாகதி அடைந்து
ஓராண்டு காலம் ஆன போதிலும்!
உன்னுடைய நினைவுகள் இல்லாத
நாட்களை கடந்ததும் இல்லை,
இனி காலங்கள் பல கடந்தாலும்
உன் நினைவுகள் எங்கள் உள்ளத்தில்
என்றென்றும் நிலைத்திருக்கும்!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேலையில் நேரில் வந்தும், தொலைபேசி மற்றும் முகநூல் ஆகியவை ஊடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
we miss you a lot Viji❤️💐