Clicky

அன்னை மடியில் 23 DEC 1934
ஆண்டவன் அடியில் 10 MAR 2022
அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி
வயது 87
அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி 1934 - 2022 கரம்பொன் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் - அருந்தா (பிரான்சு) 21 MAR 2022 France

அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி அவர்களுக்கு மலர் வணக்கம்! ஒரே ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனவாத வன்கொடுமைகளால் தூக்கி வீசப்பட்டவர்களாய் புவியெங்கும் விரவி வெவ்வேறு தடப் பயணமாகிப் போனது நம்மவர் வாழ்வு. எமது சந்ததியினரும் பூர்வீக ஊரோ - சுற்றமோ அறியாதோராய் கண்டங்கள் கடந்தோராய் தமக்கான திசைப் பயணத்தைத் தொடங்கியும் விட்டனர். மண்ணின் மைந்தர்களென தமது பெயருடன் ஊரைச் சுட்டும் மரபார்ந்த வழக்கம் நீர்த்துப் போகிறது. பெருமூச்சுகள்தான் வடிகாலாகின்றன. கண்டங்கள் கடந்த புலப்பெயர்வின் நீட்சியில் உலகம் முழுவதுமாய் தனிமைப்படுத்தி இயல்பு வாழ்வை முடங்கிய கொரோனா 2020-21-22வது ஆண்டு காலகட்டத்தில் நிகழும் பிரிவுகளில் குடும்பங்களாக ஒருங்கிணைந்து அழுது ஆற்றுப்படுத்தும் இறுதிச் சந்தர்ப்பங்களையும் துண்டிப்பது கொடிதினும் கொடிது. பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி எனும் கோட்பாட்டை மனதில் நிறுத்தி சிறப்புடன் வாழ்ந்து இயற்கையெய்திய சாரதா அம்மையாருக்கு மலர் வணக்கம்! இவரின் இறப்பால் துயருறும் குடும்பத்தார் உறவினர் சுற்றத்தினர் அனைவரோடும் எமது இரங்கலைப் பகிர்கிறோம்! உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339 - நிலையாமை) சரவணை தம்பையா-குணபூபதி வழி வேரும் விழுதுகளுமான சந்ததி மற்றும் கரம்பன் கந்தையா-தனலட்சுமி வழி வேரும் விழுதுகளுமாகிய சந்ததி சார்பாக - முகுந்தன்-அருந்தா குடும்பம் (பிரான்சு) (உறவினர்)

Tributes