1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி
1934 -
2022
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் சாரதாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-02-2023
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை...
ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் என்தாயே!
துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!
எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்
அழுதழுது தேடுதம்மா எம் விழிகள்
உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களோ!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி அவர்களுக்கு மலர் வணக்கம்! ஒரே ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனவாத வன்கொடுமைகளால் தூக்கி வீசப்பட்டவர்களாய் புவியெங்கும் விரவி வெவ்வேறு தடப்...