Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 MAR 1946
மறைவு 30 NOV 2018
அமரர் விஜயலெட்சுமி திருச்செல்வம் (கிளி)
வயது 72
அமரர் விஜயலெட்சுமி திருச்செல்வம் 1946 - 2018 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், இல 21, ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்