கம்பகா மீரிகமயைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10ஆம் கட்டை (மயில் போஸ்ட்) உயிலங்குளம், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கணேசலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 01-11-2025 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், 03-11-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல,560
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
We are sorry for your loss, our thoughts are with you during this difficult time