திதி:13/02/2026
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் பிரசாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்...
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
இனி காண்பது எப்போது?
வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும் எட்டு
திக்குகளிலும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் !
தூக்கம் கெடும் போதும்
சொல்கின்றது உங்கள் நினைப்பு
தூங்கி எழும் போதும் கனக்கின்றது
எம் இதயம் வாழ்வு அது நிஜமல்ல
உணர்ந்தோம் உங்கள் பிரிவால்
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம் மீண்டும்
பிறந்து வருவீரா எம் அன்பு !
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்..!
என் சரிபாதியே,
என் வாழ்வின் ஒளியாய் வந்தாய்
ஒளியாய் போனாய்...
கண்ணிமைக்கும் நேரத்தில் கலையாய் போனாய்
ஆசை ஆசையாய் என் கரம் பிடித்தவன் நீ,
இன்று கானல் நீராய் மறைந்தாய்...
ஏன் இந்த அவசரம்?
கையும் கையும் கண்ணும் கண்ணும் போல் இருந்தோம்...
கை வலித்தால் கண் அழும் என்பார்கள்
நீ பிரிந்தாய் என் மனம் அழுகிறது...
உன் நினைவுகள் மட்டும் நிழலாய் தொடருதே...
நிஐம் ஏனோ!
உன் பிரிவு தாங்க முடியாத பேரிழப்பு!!
பாசத்தின் உச்சமாய்,
நீ காட்டிய அன்பு இன்று பெரும் மெளனமாய்
மெளனமாகிப் போன என் வாழ்வின் அர்த்தமே
உன் நினைவுகளுடன் வாழப் பழகுகிறேன்...
வார்த்தைகள் அழுகின்றன உன் பெயர் சொல்ல!
பாதி உயிர் பிரிந்தாலும் மீதி உயிருடன் வாழ்கிறேன்,
நம் காதலின் மொத்த உருவமாய் உதித்த ஆதிரா குட்டிக்காக!!!
திரும்பி வர மாட்டாய் என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்...
We Miss You Dear Prasath
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
உன் கவியை நான் பாடினேன் - நண்பா பிரசாத் உன் மனதில் யாருக்கும் குடுக்காத உயர்ந்த இடத்தை எனக்கு தந்தாய் வருடங்கள் மாறியதில் எம் நட்பு மாறாதிருந்தது உன்னிடம் மன்னிப்பை தவிர வேறு எதையும் என்னால் கேட்க முடியாது இறுதியில் உன் பிரிவை எனக்குணர்த்தி சென்றாய் இன்னோர் ஜென்மம் இருந்தால் சந்திப்போம் என்றும் நட்புடன் உன் நண்டு Thanks for your unconditional love and sorry