Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 FEB 1953
இறப்பு 10 JUL 2025
அமரர் விக்கினேஸ்வரி ஈஸ்வரகுமாரன்
வயது 72
அமரர் விக்கினேஸ்வரி ஈஸ்வரகுமாரன் 1953 - 2025 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு ஐயனார்கோவிலடியைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்கினேஸ்வரி ஈஸ்வரகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!

தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்

இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!

ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: கணவர், பிள்ளைகள்