யாழ். உடுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேதகுரு கோகுலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்..!