யாழ். உடுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேதகுரு கோகுலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்தாலும் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்
எம் குழந்தாய் ஈரவிழிகளுடன்..
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில்
சென்றதேனோ என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு
ஆண்டு இரண்டு ஆனதுவோ
நம்ப முடியவில்லை உங்கள் நினைவால்
நாம் நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
அன்பே ஆருயிரே பாசமிகு அப்பாவே!
இமை மூடித் திறப்பதற்குள்
இரண்டாண்டு முடிந்ததப்பா
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது
அப்பா நீங்கள் வருவீர்கள்
என அம்மாவும்
உங்கள் மகளும்
வாசல் வழியே
காத்து நிற்கின்றோம்
எங்களை பாதியில்
விட்டு விட்டு
எங்கு தான் சென்றீர்கள் அப்பா
ஒவ்வொரு நாளும் உங்களை
தேடிக் கொண்டிருக்கும்
உங்கள் மனைவி, மகள், குடும்பத்தினர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..