Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 JUL 1945
மறைவு 12 OCT 2025
அமரர் வேணுகோபால் குலமணி
வயது 80
அமரர் வேணுகோபால் குலமணி 1945 - 2025 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேணுகோபால் குலமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து 
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியயைத் தருமா??

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம்  முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா… 

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர

உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 13 Oct, 2025