Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAY 1936
இறப்பு 01 NOV 2022
அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம்
இலங்கை மின்சார சபையின் ஓய்வுபெற்ற பிரதிப் பொது முகாமையாளர் (DGM), பட்டய மின் பொறியியலாளர்
வயது 86
அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம் 1936 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுப்பிட்டி வாசகசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-10-2023

ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு 
அப்பா!!

பாசத்தைக் கொட்டி, பண்பினைக்காட்டி
நேசத்துடன் அள்ளி அணைத்து
நீங்கள் கொட்டிய அன்பு நெஞ்சில் நிறைந்து
நிற்கின்றது அப்பா!

நீங்கள் இல்லாத ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களாக
இருப்பினும் நோக்கும் இடமெல்லாம் நிறைந்து
 நிற்கிறீர்கள் அப்பா!
கேட்கும் ஒலிகளில் எல்லாம் உங்கள் குரல் கேட்கின்றது அப்பா
கனவிலும் நனவிலும் உங்களைக் காண்கிறோம்

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றுவிட்டீர்களா?
 காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்....!

அப்பா, ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகள்
எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

We would like to invite you to join our father's one year remembrance day on Sunday 22.10.2023 at 78/3 W A Silva Mawatha, Colombo 6. Srilanka from 12.30pm onward. 


தகவல்: குடும்பத்தினர்

Photos