யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி கௌரி பவனம், லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் நினைவலைகள் ஓயாது வந்து
எம் மனக்கரையை தழுவும் போதெல்லாம்
விழி நனைந்து தவிக்கின்றோம்
மீளாத்துயிலில் நீங்களும்
ஆறாத்துயரில் நாமும் வாழ
படைத்தவன் எழுதிய கணக்கு!
வந்தவர் யாவரும் சென்றிடல் உறுதி என
புத்தி வந்து சொன்னாலும்
பித்து மனம் ஒருமுறை உம்மை
காணவே ஏங்குது
தோளில் சுமந்த பப்பா
மார்பில் சுமந்த அம்மா
எங்கு சென்றீர் எம்மைவிட்டு?
உடுப்பிட்டிக் கிராமம் தன்னில்
கௌரி பவனம் இல்லமதில்
இன்புடனே எல்லோரும் வாழ்ந்திருந்த காலங்கள்
மீண்டு வாராத உங்களைப்போல்
மீட்டிப்பார்க்கின்ற நினைவுகளில் மட்டும்
கலையாத உங்கள் நினைவுகளை மீட்டி
கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்கி
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டுகின்றோம்!