2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை கமலம்
வயது 86
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கமலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்- அம்மா
எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!
என்றும் நினைவகலா நினைவுகளுடன்
பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்