1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை கமலம்
வயது 86
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கமலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாலூட்டி வளர்த்த எம் தாயே - உனை
பாலூற்றி அனுப்பி ஓராண்டாய் தவிக்கின்றோம்!
அன்னமிட்ட தெய்வமே - உனக்கு
அரிசியிட்ட பாவிகளாகி நின்று அழுகின்றோம்!
எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய
சுமைதாங்கியும் நீயம்மா!
ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை
உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில்
எமக்கினி யார் தருவார்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்