யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் வேலுப்பிள்ளை செல்லம்மா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் அம்பலவன் பொக்கணை பிள்ளையார் புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 11-01-2024 வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.495/7, இராமநாதபுரம்,
கிளிநொச்சி.