திதி: 30-11-2024
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
தாயாய் எங்களை தாங்கியவளே
தமையனாய் எமைப் பார்த்தவளே
வீட்டு வாசலில் நின்று எமை வரவேற்று எங்கள்
வயிறாற உணவுதனை ஊட்டியவளே
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன் அன்னையே
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோமோ அன்னையே!!!