யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ இல்லாமல் 10 ஆண்டுகள், Dada… ️
ஆண்டுகள் பத்து கடந்தாலும்,
உன் குரலும், உன் சிரிப்பும்,
உன் அன்பும் இன்னும் என்னுள் வாழ்கிறது.
கண்ணுக்கு நீ தெரியவில்லை என்றாலும்,
மேலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டு,
நான் தளரும்போது துணிவாய்,
நான் தடுமாறும்போது வழிகாட்டியாய்,
நிழலாய் இன்னும் என்னோடு இருக்கிறாய்.
நான் பயந்தபோதெல்லாம்
தேடியது உன்னைத்தான்.
உன் சில வார்த்தைகள் போதும் —
மனம் மீண்டும் நிமிர்ந்துவிடும்.
அந்த ஆறுதலை
உன்னைத் தவிர யாராலும் தர முடியவில்லை.
பத்து ஆண்டுகள் கடந்தும்,
உன்னைத் தேடும் இந்த மனம் மட்டும்
இன்னும் மாறவில்லை, Dada…
நீ வகுத்த பாதையில்,
நான் தொடர்ந்து செல்கிறேன்.
மீண்டும் உன்னைச் சந்திக்கும் நாள் வரை....
பிள்ளைகள்: கௌரி, மீரா
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.