

வவுனியா பாவற்குளம் 1ம் யுனிற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி நமணங்குளம் 1ம் யுனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகம்மா வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதானந்தபிள்ளை லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
யுகந்தரூபன்(கனடா), கேமப்பிரியா, ஆனந்தபிரசாத், பாலப்பிரியா, பாலப்பிரசாத், பாரதிராஜன்(கனடா), ரோகினிப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, காலஞ்சென்ற சாரதாதேவி, பற்பனாதேவி, பஞ்சரத்தினம், அமிர்தலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(லண்டன்), சரோஜாதேவி(லண்டன்), திரவியமலர், மகேந்திரராஜா(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், கணேசலிங்கம், லலிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயதர்சினி, சத்தியகுமார், பரிதா, பிரேமானந்தன், ஜெயகோகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயூரிகா, அபிஷேக், திவாகரன், தமிழினி, புகழினி, ரகினாத், தனுசாத், சகினாத், ரோஜகா, பவிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.