கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதன் சிவஞானசோதி அவர்களின் நன்றி நவிலல்.
உங்களை பிரிந்து நாட்கள்
முப்பத்தொன்று கழிந்து போயிற்று
நாட்கள் மாதங்களாய் கழிந்து ஓடினாலும்
முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்
நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்
எம் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்
ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.