யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரவாகுப்பிள்ளை குகன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அழுது புலம்பித் தொழுதாலும்
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை
மதியின் கதியில் களங்கமில்லை - ஆதலால்
நனைந்த கண்மடலை கொன்று
நலிந்த எம் உணர்வை வென்று
நிகழ்ந்தது நிஜமெனக்கண்டு
தெளிந்திடும் நல் குணமது கொண்டு
அமைதி கொள் மனமே! மனமே!
கனவுகளற்ற நினைவுகளோடு கடக்கின்ற
ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அப்பா!
விழிகள் சொரிகின்றன சொல்ல
வார்த்தைகளே இல்லை அப்பா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அப்பா!
உனையிழந்த உன்னுறவு
துணையிழந்த இணைபோலும்
உனையிழந்த உன் சுற்றம்
கணையில்லா அம்புபோலும்
கானம் பாடும் குருவி கூட
உனக்காய் இன்று இரங்கல் பாட
உனையிழந்து பரிதவிக்கும்
உமதினிய சொந்தம் நாம்
நீ எம்மை விட்டுச் செல்லவில்லை
எம் நினைவுகளில் தங்கிவிட்டாய்!
நீ ஒரு முறைதான் மரணித்தாய்
உன் நினைவுகள் வரும் போது- நாம்
ஒவ்வொருமுறையும் மரணிப்போம்...!
உன் நினைவுடன் வாழும் மனைவி, பிள்ளைகள்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
நாம் துயருற்று இருந்த வேளையில் தொலைபேசி அழைப்புகள், குறும்பதிவுகள், மின்னஞ்சல்கள், முகநூல் பதிவுகள் மூலம்தொடர்பு கொண்டு எம் துயரில் பங்கேற்ற உலகம் பூராக உள்ள அன்பான உறவினர்கள், நண்பர்கள் யாவர்க்கும் இச் சந்தர்ப்பத்தில் எங்களை ஆறுதல் படுத்திய அனைவருக்கும் ஆயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.