மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், தற்போது மலேசியா செலங்கூர் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரக்குட்டி கணேசமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த எமது
அன்புத் தெய்வம்
அன்னாரின் மறைவால் ஆற்றொணாத்துயரில் மூழ்கி ஏங்கி நின்றவேளையில், குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும், ஆறுதல் - அனுதாபம் கூறித் தேற்றியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள், அஞ்சலிப்பிரசுரங்கள், செய்திகள் அனுப்பியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள், பட்டு வேட்டிகள் சாத்தியவர்களுக்கும், இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், ஈமைக்கிரியை, அந்தியேட்டி முதலிய கிரியைகளை நடாத்திய அந்தணப் பெருமக்களுக்கும், அஞ்சலி நிகழ்வுகளில் பங்குபற்றியோருக்கும் எமது இதயபூர்வமான நன்றி!
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
We wish to express our thanks and gratitude to all our relations; friends and others who helped and comforted during the demise of Late Veerakutty Ganeshamoorthy. We sincerely appreciate your sympathies, messages of condolence, via telephone calls, emails, social media and floral tributes. Your kind thoughts and deeds were very supportive and consoling at this time of grief.
May you Ganesh Anna continue to Rest In Peace!