
யாழ். கரவெட்டி மத்தி பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இலங்கை, கனடா, பிரான்ஸ், ஈரான் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த வீரகத்தி சேந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்.
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே!
இமை மூடி தூங்கினாலும்
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
நீங்கள் இல்லாத இந்த உலகம் எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
https://www.colombotelegraph.com/index.php/the-times-of-senthan-little-known-liberator-silent-giant/ https://www.colombotelegraph.com/index.php/the-times-of-senthan-little-known-liberator-silent-gi...